Wednesday , January 17 2018
Breaking News
Home / latest-update / இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்

சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கட்ட நிறுவனத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட்ட தொடருக்கான இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது.

அதன்படி இலங்கை அணியினரின் விபரம் வருமாறு,

அஞ்சலோ மெத்திவ்ஸ், உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, ஷெஹான் மதுஷங்க, அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகான், வனிது ஹசரங்க.

About admin

Check Also

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*