Wednesday , January 17 2018
Breaking News
Home / latest-update / எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்தவர் விக்னேஷ் சிவன் – சூர்யா

எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்தவர் விக்னேஷ் சிவன் – சூர்யா

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், விக்னேஷ் சிவன், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சூர்யா பேசிய போது,
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதுமையான படமாக தானா சேர்ந்த கூட்டம் இருக்கும். அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் தானா சேர்ந்த கூட்டத்தை நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது.
அனிருத் இசையில் பாடல்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள், அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை, ரொம்ப நாளாக உண்டு.
அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார். நானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன்பின் ஒரு நடிகனாகி, கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால், கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும்.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலவிஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும், எப்படி நடந்தாலும், அன்பாவே இருப்போம் என்று ரசிகர்களிடம் கூறினார் சூர்யா.

About admin

Check Also

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*