Wednesday , January 17 2018
Breaking News
Home / latest-update / சூப்பர் ஸ்டாரை வரவேற்கும் சீ.வி. விக்னேஸ்வரன்…!!!

சூப்பர் ஸ்டாரை வரவேற்கும் சீ.வி. விக்னேஸ்வரன்…!!!

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அரசியலில் ஈடபடவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், ரஜனிகாந்த் ஆன்மீக அரசியலுக்குள் வருவதை தாம் எப்போதும் வரவேற்பேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் ஈடுபடவுள்ளதாக அண்மையில் சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவர் பல்வேறு அரசியல் தரப்புக்களை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக பேசிவருகின்றார்.

இந்த நிலையில், இன்று பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த் அரசியலுக்குள் வருவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஆன்மீக அரசியலை தான் எப்போதும் வரவேற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் ரஜனிகாந்த் அரசியலுக்கு வருவதையும் தான் வரவேற்கிறேன் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

About admin

Check Also

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*