Wednesday , January 17 2018
Breaking News
Home / latest-update / தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட ரயில் விபத்து!

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட ரயில் விபத்து!

தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ள புகையிரத விபத்தில், சுமார் 220 பேர் காயமடைந்துள்ளனர்.
தென்னாபிரிக்காவின் கிழக்கு ஜோஹன்னஸ்பேர்க் (Johannesburg) பகுதியிலிருந்து 12 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஜெர்மிஸ்டன் (Germiston) நகர் புகையிரத நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் பின்னால் மற்றுமொரு ரயில் வந்து மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் தொடர்பான எதுவித தகவலும் இல்லையென்பதுடன், வேலைக்குச் செல்வோரே அதிகளவில் காயமடைந்துள்ளதாகவும், ரயில் நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

About admin

Check Also

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*