Wednesday , January 17 2018
Breaking News
Home / latest-update / நிறத்திற்காக மாணவி எடுத்த விபரீத முடிவு!

நிறத்திற்காக மாணவி எடுத்த விபரீத முடிவு!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 9 ஆம் தர மாணவி ஒருவர் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் தன்னை கிண்டல் செய்த காரணத்தால் மனமுடைந்து தனக்குத்தானே தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

லாவண்யா(14) என்ற மாணவி, Domadugu கிராமத்தில் உள்ள Pragathi High School இல் கல்வி கற்றுவந்துள்ளார்.

இவருடன் படிக்கும் சக மாணவர்கள், லாவண்யாவின் தோல் நிறத்தை கிண்டல் செய்துள்ளனர், கருப்பாக இருக்கிறாய், பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது என அடிக்கடி கிண்டல் செய்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த லாவண்யா இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்தும், அவர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இக்கிண்டல் தொடர்ந்து கொண்டே இருந்ததால், மனமுடைந்த லாவண்யா, தனது வீட்டில் தனக்குத்தானே தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், இவரது உடல் 45 சதவீதம் எரிந்துள்ளது.

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாவண்யாவிடம், சிகிச்சைக்கு பின் வாக்குமூலம் பெறப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளை என்பது அழகு அல்ல!

About admin

Check Also

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*