Wednesday , January 17 2018
Breaking News
Home / latest-update / பிணங்களுடன் வாழ்ந்த 5 வயது சிறுமி!

பிணங்களுடன் வாழ்ந்த 5 வயது சிறுமி!

வவுனியா மஹரம்பைக்குளம் பகுதியில் மனைவியை கொலை செய்து கணவன் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் 51 வயதுடைய செல்வம் புஷ்ப்பராணி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். பியசேன எதிரிசிங்ஹ என்பவரே கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த பெண் முதலாவது திருமணம் செய்து கணவனை பிரிந்து எதிரிசிங்க என்பவரை மறுமணம் செய்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், எதிரிசிங்க என்பவர் புஷ்பராணியை பொல்லை கொண்டு தலையில் தாக்கியதாகவும் பின்னர் எதிரிசிங்க என்பவர் சுறுக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என புஷ்ப்பராணியின் ஐந்து வயதுடைய பேத்தியான சிறுமி தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமியின் பெற்றோர் இல்லாத நிலையில் சிறுமி தனது அம்மம்மாவான புஷ்ப்பராணியிடமே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த சிறுமி இரு பிணங்களுடையே தனது இரவு முழுதும் இருந்துள்ளார்.

About admin

Check Also

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*