Monday , June 26 2017
Breaking News
Home / latest-update (page 6)

latest-update

வவுனியா செட்டிக்குளத்தில் இரு பிள்ளைகளின் தந்தை கோரமாக வெட்டிக் கொலை

வவுனியா செட்டிகுளத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை வெட்டுக்காயங்களுடன் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார். வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்;பட்ட சின்னக்குளத்தில் வசித்த 40 வயதுடைய முத்துலிங்கம் கனகராஜா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே செட்டிகுளம் சண்முகபுரம் கிராமத்தில் வீதியோரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 5 மணிக்கு வவுனியா நகர்பகுதிக்கு சென்றதாக கூறி பேரூந்தில் சென்ற இவர் இரவு சுமார் 9 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் …

Read More »

சுண்டுக்குளி மகளிர் மாணவி ஆஷிகா பொதுநலவாய போட்டிக்கு தெரிவு

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஆஷிகா விஜயபாஸ்கர் தேசிய ரீதியிலான பளுதூக்கல் தெரிவுப் போட்டியில் முதலாமிடத்தை பெற்று சர்வதேச பளுதூக்கல் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். கடந்த 20ஆம் திகதி கொழும்பு றொறிங்ரன் உள்ளக விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்ட தேசிய ரீதியிலான பளுதூக்கல் தெரிவுப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுவரும் விஜயபாஸ்கர் ஆஷிகா சிறுவயது முதல் கராத்தேயில் தன்னை இணைத்து அதில் மிகுந்த
ஆர்வம் காட்டி வந்துள்ளார். …

Read More »

கார் பள்ளத்தில் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

கொழும்பு – அவிசாவளை பகுதியிலிருந்து கினிகத்தேனை பகதுலூவ பகுதியை நோக்கி சென்ற காரொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் சனித் தேமிக்க (வயது 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனின், தந்தை, தாய், பாட்டி ஆகியோரே விபத்தில் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த குறித்த கார் கினிகத்தேனை நகரத்திற்கு அண்மித்த …

Read More »

சென்னை சில்க்ஸில் தீ விபத்து..13 மணிநேரமாக எரியும் தீ! இடிந்து விழும் அபாயத்தால் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த 13 மணிநேரமாக போராடியும் தீயை அணைக்க முடியாததால் கட்டிடம் இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடையின் உள்ளே இருந்த தங்க நகைகள், துணிகள், பாத்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சில்க்ஸில் தீ விபத்து சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள …

Read More »

ஜுன் மாதம் முழுவதும் வடக்கு மக்கள் எதிர்கொள்ளப் போகும் அவலம்!

ஜுன் மாதம் 2ம் திகதி முதல் 30 ம் திகதிவரை வட மாகாணத்தில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு வேலைகளுக்காக இந்த மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் குறிப்பிட்டசில நாட்களில் முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை அமுலில் இருக்கும் எனவும்இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Read More »

பிரபாஸுக்கு 2018ல் திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா?

பிரபாஸ் பாகுபலிக்குப் பிறகு இந்திய ஹீரோவாகி தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது திருமணம் எப்போது என சமூக வலைதளங்களில் பட்டிமன்றம் நடித்தி வருகிறார்கள் ரசிகர்கள். பாகுபலி பட ஷூட்டிங் நடைபெற்றபோது ஆறாயிரம் பெண்களிடம் இருந்து ப்ரபோசல்கள் வந்ததாக தெரிவித்து இருந்தார் பிரபாஸ். இந்நிலையில் பாகுபலியில் ஹீரோயினாக நடித்த அனுஷ்கா ஷெட்டியுடன் காதல் என வதந்தி பலமாக கிளம்பியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் 2018ல் …

Read More »

23 வயது இளைஞரை 3 நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்த பெண்கள்

தென் ஆப்பிரிக்காவில் 23 வயது இளைஞரை 3 பெண்கள் சேர்ந்து 3 நாட்கள் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா நகரத்தின் கிழக்கு பகுதியில் 15 பேர் பயணம் செய்யும் டாக்ஸியில் தனது வீட்டுக்கு செல்வதற்காக ஏறிய இளைஞருக்கு மயக்க ஊசி போடப்பட்டுள்ளது. மயக்கம் தெளிந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத அறையில் ஒரு படுக்கையில் இருந்துள்ளார். மயக்கம் தெளிந்த இளைஞருக்கு எனர்ஜி …

Read More »

வெள்ள நிவாரணத்துக்காகச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது!

மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியின் விமானியுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாடியுள்ளார். இதன்போது அவரின் தைரியமான செயற்பாடு குறித்து ஜனாதிபதி பாராட்டியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கச் சென்ற உலங்கு வானூர்தி பத்தேகம, இனிமங்கட பகுதியில் விபத்துக்குள்ளாகியது. எனினும் அதில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்த விமானியின் திறமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார். இதேவேளை, இலங்கை …

Read More »

திருமண வீட்டினுள் புகுந்த திருடர்களின் சாதுரியம்! யாழில் சம்பவம்

கோப்பாய் வடக்கு, இராஜ வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில் 15 பவுண் தங்க நகைகள் மற்றும் ஒரு தொகைப் பணம் என்பன திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரிய வருவதாவது, மேற்படி வீட்டில் நேற்று முன்தினம் திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், அன்றைய தினம் இரவே குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளது. திருமண வீடு என்பதால் குறித்த வீட்டில் உறவினர்கள் …

Read More »

நீரில் மூழ்கும் அபாய கட்டத்தில் இலங்கை பாராளுமன்றம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியவன்னா ஓயவின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பாராளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தியவன்னா ஓயவின் நீர் பாராளுமன்றத்தை மூடினால் அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மணல் மூட்டைகள் கொண்டு அதனை சுற்றி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறான அபாய நிலை ஏற்படும் பட்சத்தில் அதனை தடுக்க கடற்படையினர் …

Read More »