Saturday , December 16 2017
Breaking News
Home / சினிமா

சினிமா

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார். கடந்த மே மாதம் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சந்தித்தார் ரஜினிகாந்த். மேலும் அவர்கள் மத்தியில் அரசியல் குறித்து பேசினார். “சில அரசியல்வாதிகள் எனது பெயரை பயன்படுத்தி ஆதாயம் பெற்றனர். எனது ரசிகர்களையும் அவர்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர். அமைச்சராக ஆசைப்படலாம். …

Read More »

பிறந்த நாள் வாழ்த்து கூறி ஆர்யாவை கலாய்த்த திரிஷா

நடிகர் ஆர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி அவரை கலாய்த்திருக்கிறார் நடிகை திரிஷா. நடிகர் ஆர்யா தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை கூறினார்கள். இதில் நடிகை திரிஷாவும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்துச் செய்தியில் என் அன்புக்குரிய ஆர்யாவுக்கு இனிய பிறந்த வாழ்த்துக்கள். உன் வாழ்க்கையில் எப்போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் அவர் …

Read More »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்யவிருப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கிறது. ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு, அதில் 72 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நடிகர் விஷால், ஜெ.தீபா உள்ளிட்ட 74 …

Read More »

விஷால்-சேரன் தரப்பினர் வாக்குவாதம்: தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்

சென்னையில் இன்று நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் விஷால், சேரன் தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்த கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் சங்க தலைவர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு அளித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சங்கத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் ஊழல் நடந்திருப்தாகவும் சேரன் தலைமையிலான …

Read More »

ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்

தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ‘மதுரவீரன்’ படத்தில் இடம் பெறும் ‘என்ன நடக்குது நாட்டுல…’ பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மதுரவீரன் திரைப்படத்திலிருந்து “என்ன நடக்குது நாட்டுல“ எனும் சிங்கள் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் …

Read More »

அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார். ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் நடிகர் விஷால் சுயட்சையாக போட்டியிடுவதாக அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் சில காரணங்களால் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து வெளியில் இருந்து ஆர்.கே.நகர் மக்களுக்கு நல்லது செய்வேன் என்று கூறியிருக்கிறார். மேலும் சுயட்சை வேட்பாளருக்கு அதரவு …

Read More »

விஜய் சேதுபதி படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரும், ஆஸ்கார் விருது வென்றருமான ஏ.ஆர்.ரஹ்மான் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியிருக்கிறார். விஜய் சேதுபதி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்குப் படம் உருவாக இருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் சிரஞ்சீவி, …

Read More »

விஷாலுக்கு குரல் கொடுத்த தனுஷ்

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘சண்டக் கோழி’ படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இடம் பெறும் சிறப்பு பாடலை தனுஷ் பாடியுள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2005-ல் வெளியான படம் ‘சண்டக்கோழி’. 12 வருடங்கள் கழித்து தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் லிங்குசாமியே இயக்கி வருகிறார். படத்தின் நாயகனாக விஷால் நடிக்கிறார். நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் …

Read More »

அதிக தொகைக்கு விலைபோன விஷாலின் `இரும்புத்திரை’

மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் `இரும்புத்திரை’ படத்தின் கேரள திரையரங்கு உரிமை அதிக தொகைக்கு விலை போயுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. `துப்பறிவாளன்’ படத்தை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை’ படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2′ படத்திலும் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்துவரும் `இரும்புத்திரை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் கிங் அர்ஜுன், …

Read More »

கமல்ஹாசன், விரைவில் ரசிகர்களுடன் ஆலோசனை

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகி இருக்கும் நிலையில், விரைவில் தனது ரசிகர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறாராம். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்து இருக்கிறார். அரசியல் பற்றிய தனது கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற டிசம்பர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசன் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கமல் …

Read More »