Monday , June 26 2017
Breaking News
Home / யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் – மாவை அவசர சந்திப்பு

வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கிடையில் அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்று உள்ளது. குறித்த கலந்துரையாடலானது தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை ஐந்து மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த கலந்துரையாடலில் அண்மையில் ஏற்பட்ட வடமாகாணசபை குழப்பங்கள் தொடர்பில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக குழப்ப சூழ்நிலை நீடித்திருந்த நிலையில் வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை …

Read More »

யாழில் பெற்றோல் குண்டு வீச்சு : இளைஞர் கைது

யாழ். பருத்தித்துறை 1 ஆம் கட்டையை அண்மித்த பகுதியில் பெற்றோல் குண்டு வீசப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை யாழ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். இதில் புலோலி தென்மேற்கைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதவான் மன்றில் முற்படுத்தப்பட்டு 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பருத்தித்துறை …

Read More »

யாழில் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கொழும்பில் விற்ற நபர் யாழ். திரும்பும் வழியில் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தில் உள்ள வங்கி அதிகாரியின் வீட்டில் 12 இலட்சம் ரூபா பெறுமதியான 26 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இரு சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான திருடர்கள் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்கள் வேறு ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்ததுடன் சில தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பிரதான சந்தேகநபர் கொள்ளையிட்ட …

Read More »

கிளிநொச்சி பகுதியில் மாடுடன் இரயில் மோதி விபத்து!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ். நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் வைத்து மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன் போது குறித்த மாடு உயிரிழந்துள்ளதுடன், புகையிரதத்தின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளமையால் புகையிரதத்தை நகர்த்துவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் வைத்து, சீர் செய்ததன் பின்னர் குறித்த புகையிரதம் யாழ். நோக்கி பயணித்தது. காலை 11.05 மணிக்கு கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இருந்து …

Read More »

வடக்கு முதல்வருக்கு ஆதரவாக நாளைய தினம் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ் மக்கள் பேரவை

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான கபட நாடகங்களுக்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக வடகிழக்கில் நாளைய தினம் பொது கடையடைப்பு ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்மக்கள் பேரவை இன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறுகிய முன் அறிவிப்பை பொறுத்துக்கொண்டு, இனத்தின் நலன்கருதி எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அனைவரும் இந்த கடையடைப்புக்கு ஆதரவு தரவேண்டும் என நாம் …

Read More »

அறுந்து தொங்­கிய மின் கம்­பி­யில் சிக்­குண்டு முதி­ய­வர் பரி­தா­பச் சாவு

மழை நேரம், மின் கம்பி அறுந்­து­தொங்­கிக் கொண்­டி­ருந்த நிலை­யில் சாலை­யில் பய­ணித்த முதி­ய­வர் மின் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கிச் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் கொடி­கா­மம் – பருத்­தித்­துறை வீதி­யில் நேற்­றி­ரவு 7 மணி­ய­ள­வில் இடம்­பெற்­றது. தாவளை இயற்­றா­லை­யைச்  சேர்ந்த சின்­னத்­தம்பி சிவ­குரு (வயது 81) என்ற முதி­ய­வரே உயி­ரி­ழந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ரது சட­லம் சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது. தனது கடை­யைப் பூட்­டி­விட்டு வீடு …

Read More »

அதி­சொ­கு­சுப் பேருந்­தில் கடத்­தப்­பட்ட மரக்­குற்­றி­க­ளும் பொலி­ஸி­டம் சிக்­கின

முல்­லைத்­தீ­வி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு அதி­சொ­குசு பேருந்­தில் மற்­றொரு மரக் கடத்­த­லும் நேற்று முறி­ய­டிக்­கப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். “முல்­லைத்­தீ­வி­லி­ருந்து குளி­ரூட்­டப்ட்ட அதி­சொ­குசு பேருந்­தில் ஏ9 பாதை­யூ­டாக மரக்­குற்­றி­கள் கடத்­தப்­ப­டு­வது தொடர்­பில் தக­வல் கிடைத்­தது. அந்­தப் பேருந்து வழி­ம­றிக்­கப்­பட்­டது. எனி­னும் கடத்­தல்­கா­ரர்­கள் பேருந்தை நிறுத்­தா­மல் சென்­ற­னர். துரத்­திச் செல்­லப்­பட்­டது. சம்­ப­வம் தொடர்­பில் கொடி­கா­மம் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. அவர்­கள் பார­வூர்தி ஒன்றை வீதிக்­குக் குறுக்­காக நிறுத்­திப் பேருந்தை வழி­ம­றித்­த­னர்.   இத­னால் செய்­வ­த­றி­யாத சாரதி …

Read More »

33 வருடங்களுக்குப் பின் வடக்கில் மீண்டும் உதயமாகப்போகும் திணைக்களம்

வடக்கில் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணியகம் ஒன்று திறந்துவைக்கப்படவுள்ளது. குறித்த பணியகம் காங்கேசன்துறையில் இந்த மாதம் திறந்து வைக்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடக்கில் சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் முற்றாக முடங்கியிருந்தன. சுமார் 33 வருடங்களாக வடக்கில் சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமல் இருந்தன எனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் வடக்கில் தற்போது நடைபெறும் கடத்தல் சம்பவங்களை கருத்தில் …

Read More »

யாழிலிருந்து புறப்பட்டது நிவாரணப் பொருள்கள் அடங்கிய பாரவூர்திகள்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களுடன் ஒரு பாரவூர்தியும், வட மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் சேகரிக்கப்பட்ட பொருள்களுடன் 5 பாரவூர்திகளும், யாழ்ப்பாணத்திலிருந்து இன்று மதியம் புறப்பட்டது. ஆளுநர் அலுவலகத்தினால் சேகரிக்கப்பட்ட பொருள்கள் களுத்துறை மாவட்டத்திற்கும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட பொருள்கள் மாத்தறை மாவட்டத்திற்கும் வழங்கப்படவுள்ளன.

Read More »

பொன்னாலை – திருவடிநிலைக் காடு தீப்பற்றி எரிந்தது, பல ஏக்கர் நாசம்

பொன்னாலை தொடக்கம் திருவடிநிலை வரையான பற்றைக் காடு நேற்று தீப்பற்றி எரிந்த நிலையில் யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் ஏனைய பிரிவினருடன் இணைந்து கடும் பிரயத்தனத்தின் மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், அப்பகுதியில் பல ஏக்கர் கணக்கான காடு தீயினால் எரிந்து நாசமானது. வலி.மேற்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் வலி.மேற்கு மற்றும் காரைநகர் பிரதேச சபைகள், காரைநகர் பிரதேச செயலகம், பிரதேச மக்கள் ஆகியவர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் …

Read More »