Saturday , December 16 2017
Breaking News
Home / இலங்கை

இலங்கை

வடக்கில் மாணவிகளுடன் பாலியல் லீலை புரியும் ஆசிரியர்களுக்கு நலம் எடுக்க ஆயத்தம்!!

வடக்கு மாகாணத்தில் மாணவிகளுடன் பாலியல் லீலைகள் புரியும் ஆசிரியர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் புவனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. அவற்றைச் செய்யும் ஆசிரியர்கள் தண்டிக்கப்படுகிறார்களா? நிச்சயமாக இல்லை. எனவே அவற்றைத் தடுக்கும் வகையில் பொறிமுறை ஒன்றை வடக்கு மாகாண சபை உருவாக்கவேண்டும்” இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண …

Read More »

இலங்கை – நோர்வே நாடுகளுக்கிடையில் வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகள் நடத்தப்பட்டன

இலங்கையும் மற்றும் நோர்வே நாடுகளுக்கிடையிலான வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகள் ஒஸ்லோ நகரில் கடந்த 11ம் திகதி நடத்தப்பட்டுள்ளன. இதன் போது இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.பிரசாத் காரியவசம், நோர்வே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நாயகம் திரு.வேகர் ஸ்ட்ரோமனை சந்தித்துள்ளார். நோர்வேயின் உதவியுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தல் தொடர்பான …

Read More »

அம்பாறையில் இளம் தமிழ் குடும்பப் பெண் ரிஸ்வினிக்கு நடந்தது என்ன?

அம்பாறை – திருக்கோயில் விநாயகபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் திருக்கோயில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பெண் நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பெண் நேற்று முன்தினம் நண்பகல் 12.00 மணியளவில் திருக்கோயில் வைத்தியசாலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார் எனவும் இவர் இதுவரையும் வீடு திரும்பவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இவர் வீட்டில் இருந்து வெளியேறும்போது சிவப்பு …

Read More »

மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரம் எகமுத்துகம பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் வெங்கடாசலம் சகுந்தலா வயது 52 என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது வீட்டின் நீர் இறைக்கும் மோட்டாருக்கு அருகாமையில் மின் கம்பியை பிடித்தவாறு விழுந்து கிடந்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் 2 மணித்தியாலத்துக்கு முன்னதாகவே …

Read More »

முகமாலைப் பிரதேசம் முற்றுமுழுதாக கண்ணிவெடி அகற்றப்பட்டது!

கிளிநொச்சி மாவட்டம் முகமாலைப் பிரதேசம் முற்றுமுழுதாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதாகத் தெரிவித்து பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சர்வதே கண்ணிவெடிகள் அகற்றும் அமைப்பினர், இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் இணைந்து கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டுவந்தனர். நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட 48 ஏக்கர் நிலப்பரப்பு பளை பிரதேச செயலாளர் பிரமோதயன் ஜெயராணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் செயற்பாடு கடந்த 8 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

75 லட்சம் மதிப்பிலான கேரளா கஞ்சா காருடன் பறிமுதல் – ஒருவர் கைது

ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள பொலிஸார் ஒருவரை கைது செய்து முக்கிய கடத்தல்காரரை தேடிவருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகு மூலம் கேரளா கஞ்சா கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மாவட்ட சிறப்பு பிரிவு காவல்துறை மற்றும் கியூபிரிவு பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மண்டபம் …

Read More »

முல்லைத்தீவு விசுவமடுவில் ரியுசன் வாத்தியின் பாலியல் லீலை!! ரியுசன் தீ வைத்து எரிப்பு!!

விசுமடு பகுதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த ஆசியார் ஒருவர் அங்கு கல்வி கற்ற மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம், நேற்றைய தினம்(09) இடம்பெற்றுள்ளதாகவும், இன்றைய தினம் குறித்த ஆசிரியரை ஊர்தலைவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். எனினும், குறித்த ஆசிரியர் விசாரணைக்கு செல்ல மறுத்துள்ளார். இந்த நிலையில், விசுமடு பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் இன்று இரவு 7.00 …

Read More »

நெடுங்கேணியில் 21 வயதான இளம் யுவதி கம்சிகா சடலமாக மீட்பு

நெடுங்கேணி – பளம்பாசிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யோகானந்தராசா கம்சிகா(20) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More »

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம்: போக்குவரத்து அமைச்சரின் அதிரடி அறிவிப்பினால் திணறும் ரயில்வே திணைக்களம்!!

ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படுவதால், உடனடியாக சேவைக்குத் திரும்பாத ரயில்வே ஊழியர்கள் தத்தமது பதவிகளை இராஜினாமா செய்தவர்களாகக் கருதப்படுவர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் கடந்த மூன்று தினங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.இதையடுத்து ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி பத்திரத்தில் ஜனாதிபதி நேற்று (8) இரவு கைச்சாத்திட்டார்.இந்த …

Read More »

கள்ளக்காதல்!! சிங்கள வைத்தியரின் குடும்பத்தைக் குழப்பிய யாழ் பல்கலைக்கழக மாணவன்

யாழ் பல்கலைக்கழக 2ம் ஆண்டு மாணவனுடன் முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு காதலித்து பின்னர் பல தடவைகள் தனியாக சந்தித்து வந்த இளம் சிங்களக் குடும்பப் பெண்ணை வைத்தியரான கணவன் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். அத்துடன் குறித்த மாணவன் தொடர்பாக கம்பஹாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த மாணவனும் சிங்களப் பெண்ணும் முகப்புத்தகம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றில் பரிமாறிக் கொண்ட அந்தரங்கப் புகைப்படங்களையும் கணவன் பொலிசாரிடத்தில் …

Read More »