Sunday , August 20 2017
Breaking News
Home / latest-update / சீன சுரங்கப்பாதையில் கோர விபத்து: பள்ளி பேருந்து தீப்பிடித்து 11 குழந்தைகள் உயிரிழப்பு

சீன சுரங்கப்பாதையில் கோர விபத்து: பள்ளி பேருந்து தீப்பிடித்து 11 குழந்தைகள் உயிரிழப்பு

சீன சுரங்கப்பாதையில் கோர விபத்து: பள்ளி பேருந்து தீப்பிடித்து 11 குழந்தைகள் உயிரிழப்பு

பீஜிங்:

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷாண்டாங் மாகாணத்தின் வெய்ஹாய் நகரில் உள்ள சர்வதேச மழலையர் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் இன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ், சுரங்கப்பாதைக்குள் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அத்துடன் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் 5 தென்கொரிய குழந்தைகள், 6 சீனக் குழந்தைகள் என 11 மாணவர்களும், பஸ் டிரைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உள்ளூர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன. அதில், சுரங்கப் பாதையின் நுழைவு வாயிலில் இருந்து கரும்புகை வெளியேறுவது தெளிவாகத் தெரிந்தது.

ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனாலும், விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனாவில் 2013ம் ஆண்டு 2.5 லட்சம் மக்கள் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

About admin

Check Also

யாழில் கடனை வசூலிக்கச் சென்றவர்களால் குழப்பம்

யாழ்ப்பாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் கடனை வசூலிக்க நேற்றிரவு, வாடிக்கையாளரின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு குழப்பமான சூழ்நிலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*