Sunday , October 22 2017
Breaking News
Home / latest-update / சென்னை சில்க்ஸில் தீ விபத்து..13 மணிநேரமாக எரியும் தீ! இடிந்து விழும் அபாயத்தால் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது

சென்னை சில்க்ஸில் தீ விபத்து..13 மணிநேரமாக எரியும் தீ! இடிந்து விழும் அபாயத்தால் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

கடந்த 13 மணிநேரமாக போராடியும் தீயை அணைக்க முடியாததால் கட்டிடம் இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடையின் உள்ளே இருந்த தங்க நகைகள், துணிகள், பாத்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை சில்க்ஸில் தீ விபத்து

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

கடைக்குள் 10 பேர் சிக்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

குறுகிய சாலையில் கடை அமைந்திருப்பதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தரைத்தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறி வருகிறது, மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் “சென்னை சில்க்ஸ்” அமைந்துள்ள இடம் அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தில் 7 மணிநேரமாக எரியும் தீயால், உள்பகுதியில் சில சுவர்கள் இடிந்துவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கட்டிடத்தில் விரிசல் ஏற்படுவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டரின் கோரிக்கை

தீ விபத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் அளித்த பேட்டியில், சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள தி.நகர் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம்.

அதிகாலை முதலே தீ பற்றி எரிகிறது, தரைத்தளத்தில் பற்றிக் கொண்ட தீ மேல் தளங்களுக்கும் பரவியுள்ளது.

உயிரிழப்பு ஏதுமில்லை, கட்டிடத்தின் உள்ளே சிக்கிக் கொண்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை சில்க்ஸ் கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள மற்ற கடைகள் எதையும் திறக்க வேண்டாம்.

முதலில் தீயை அணைத்துவிட்டு விபத்துக்கான காரணத்தை கண்டறிவோம் என தெரிவித்துள்ளார்.

About admin

Check Also

பா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பு – சர்ச்சை கருத்துக்களை நீக்க தயார் என மெர்சல் தரப்பில் அறிவிப்பு

மெர்சல் திரைப்பட விவகாரத்தில் தயாரிப்பாளர் தரப்பினர் பா.ஜ.க தலைவர்களை சந்தித்ததை அடுத்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க தயார் என பட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*