Wednesday , October 18 2017
Breaking News
Home / latest-update / லண்டனில் பயங்கரவாதிகள் அட்டகாசம் – 6 பேர் பலி – 48 பேர் படுகாயம்

லண்டனில் பயங்கரவாதிகள் அட்டகாசம் – 6 பேர் பலி – 48 பேர் படுகாயம்

பிரித்தானியாவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 5 வைத்தியசாலைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, லண்டன் நகரம் பெரும் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள நிலையிலும் பொதுத் தேர்தல் திட்டமிட்டப்பட்டி எதிர் வரும் வியாழக்கிழமை நடைபெறும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

 

லண்டன் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை தொடந்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“தீவிரவாதத்திற்கு அப்பாவி மக்களை பலி கொடுத்தது போதும். இனிமேல் ஒரு உயிர்க் கூட தீவிரவாதத்திற்கு பலியாக அனுமதிக்க கூடாது” என அவசர கூட்டத்தின் போது உரையாற்றிய பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரத்து செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரம் நாளை(05) நடைபெறும் என்றும் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் பயங்கரவாத தாக்குதலின் போது பொது மக்களால் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகள் இருப்பின் தந்துதவ வேண்டும் என லண்டன் மாநகர பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த தாக்குதலை பொதுமக்கள் பலர் புகைப்படம் எடுத்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி எடுத்திருந்தால் அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பொலிஸாருக்கு தந்துதவ வேண்டும் எனவும், அது விசாரணைகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் லண்டன் மாநகர பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

லண்டன் நகரில் பல வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக பிரித்தானியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் என்று லண்டன் மேயர் சாதிக் கான் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தேரேசா மேயுடன் பாதுகாப்புத் தொடர்பான ஆலோசனையில் பங்கேற்கவுள்ளதாகவும் சாதிக் கான் கூறியுள்ளார்.

தாக்குதல்கள் தொடர்பில் முழுமையான தகவல்கள் தற்போது வரையிலும் கிடைக்கப் பெறவில்லை எனவும் லண்டன் மேயர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

About admin

Check Also

தீபாவளி ஸ்பெஷல்: தித்திப்பான பாதுஷா

அனைவருக்கும் பாதுஷா பிடிக்கும். இந்த தீபாவளிக்கு தித்திக்கும் பாதுஷாவை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*