Monday , June 26 2017
Breaking News
Home / latest-update / அதி­சொ­கு­சுப் பேருந்­தில் கடத்­தப்­பட்ட மரக்­குற்­றி­க­ளும் பொலி­ஸி­டம் சிக்­கின

அதி­சொ­கு­சுப் பேருந்­தில் கடத்­தப்­பட்ட மரக்­குற்­றி­க­ளும் பொலி­ஸி­டம் சிக்­கின

முல்­லைத்­தீ­வி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு அதி­சொ­குசு பேருந்­தில் மற்­றொரு மரக் கடத்­த­லும் நேற்று முறி­ய­டிக்­கப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
“முல்­லைத்­தீ­வி­லி­ருந்து குளி­ரூட்­டப்ட்ட அதி­சொ­குசு பேருந்­தில் ஏ9 பாதை­யூ­டாக மரக்­குற்­றி­கள் கடத்­தப்­ப­டு­வது தொடர்­பில் தக­வல் கிடைத்­தது. அந்­தப் பேருந்து வழி­ம­றிக்­கப்­பட்­டது. எனி­னும் கடத்­தல்­கா­ரர்­கள் பேருந்தை நிறுத்­தா­மல் சென்­ற­னர். துரத்­திச் செல்­லப்­பட்­டது. சம்­ப­வம் தொடர்­பில் கொடி­கா­மம் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.
அவர்­கள் பார­வூர்தி ஒன்றை வீதிக்­குக் குறுக்­காக நிறுத்­திப் பேருந்தை வழி­ம­றித்­த­னர்.   இத­னால் செய்­வ­த­றி­யாத சாரதி பேருத்தை வீதி­யில் நிறுத்­தி­னார். இதனை அடுத்து குறித்த பேருந்தை பொலி­ஸார் இலா­வக­மாக மடக்­கிப் பிடித்­த­னர்.
கடத்­தப்­பட்ட மரக்­குற்­றி­கள் கொடி­கா­மம் பொலி­ஸா­ரால் கைப்­பற்றப்பட்டன. அவற்­றைக் கடத்­தி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் பேருந்­தின் சாரதி கைது செய்­யப்­பட்­டார்”  என்று கிளி­நொச்சி, முல்­லைத்­தீ­வுப் பிராந்­திய பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் சிறப்­புப் படை­ய­ணி­யி­னர் தெரி­வித்­த­னர்.

About admin

Check Also

20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் – சீ.சீ.டீ.வியில் சிக்கிய காதலன்

கொட்டாவையில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று களுபோவில வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 29 வயதான தரிந்தி ஆலோக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*