Monday , June 26 2017
Breaking News
Home / latest-update / போலியான சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தவர் கைது

போலியான சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தவர் கைது

பொல்­க­ஹ­வல, மெட்­டி­கும்­புரப் பிர­தே­சத் தில் ​போலி­யான  சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரம் தயா­ரிக்­கும் நிலை­யம் ஒன்று சுற்­றி­ வ­ளைக்­கப்­பட்­டது. சந்­தேக நபர் ஒரு­வர்  நேற்றுமுன்­தி­னம் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலிஸ் தலை­மை­ய­கம் தெரி ­வித்­தது.
அலவ்வ பொலிஸ் நிலை­யத்­தில் போக்­கு­வ­ரத்து பிரி­வில் பணி­யாற்­றும் பொலிஸ் அதி­கா­ரி­கள் குழு­வால், மோட்­டார் சைக்­கிள் ஒன்றை நிறுத்­திச் சோதனை செய்த போது, சாரதி அனு­ம­திப் பத்­தி­ரம் போலி­யா­ னது என்று தெரிய வந்­துள்­ளது. சார­தி­யி­டம் விசா­ரணை மேற்­கொண்ட போது அது போலி­யான சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரம் என்­ப­தும், அத­னைத் தயா­ரிக்கும் நிலை­யம் தொடர்­பி­லும் பொலி­ஸா­ருக்குத் தக­வல் கிடைத்­துள்­ளது.
அதற்­க­மை­வாக மெட்­டி­கும்­புரப் பிர­தே­சத்­தில்  வீடொன்­றைச் சோதனை செய்தபோது, போலி­யான  வாகன இலக்­கத்­த­க­டு­கள் நான்கு, போலி யான இறப்­பர் முத்­திரைகள் மூன்று, தேசிய அடை­யாள அட்­டை­கள் மூன்று, சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் 9 மற்­றும் போலி­யான  ஆவ­ணங்­க­ளும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
இதன்­போது அந்த வீட்­டில் இருந்த 47 வய­து­டைய சந்­தேக நபர் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்­டார். அவர் பொல்­க­ஹ­வெல நீதி­வான் நீதி­மன்­றில்  முன்­னி­லைப் படுத்தப்­பட்டார். அவரைஎதிர்­வ­ரும் 22 ஆம் திகதிவரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்க  நீதி­ மன்று உத்­த­ர­வி­டப்­பட்­டது என்று  பொலிஸ் தலை­மை­ய­கம் கூறி­யுள்­ளது.

About admin

Check Also

20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் – சீ.சீ.டீ.வியில் சிக்கிய காதலன்

கொட்டாவையில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று களுபோவில வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 29 வயதான தரிந்தி ஆலோக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*