பஸ் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்த பருத்தித்துறை விஜிதரன்

July 9, 2016 2:01 pmComments Off on பஸ் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்த பருத்தித்துறை விஜிதரன்Views: 73

3281-1-737e5c31590f931a01c2398e133bede8வடமராட்சி பருத்தித்துறை ஏழாம் கட்டைச் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.15 மணியளவில் இ.போ.ச பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் சிங்கைநகர் புலோலி தெற்கைச் சேர்ந்த மினிஸ்வரன் விஜிதரன் (வயது 26) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

சிங்கை நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர், யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறைக்கு சென்று கொண்டிருந்த இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுடன் மோதுண்ட வேளை விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் அவ் இளைஞர் இ.போ.ச பஸ் வண்டியின் பின் சக்கரங்களுக்குள் நசியுண்டுள்ளார். இதனையடுத்து படுகாயங்களுடன் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரியவருகிறது.

இவர் வெளிநாடு ஒன்றில் வேலை புரிந்ததாகவும் அண்மையில் தமது ஊருக்கு வந்ததாகவும் அறிய முடிகிறது. சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

எமது மின்னஞ்சல் முகவரி editoryarlosai@yahoo.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.

Comments are closed