Sunday , August 20 2017
Breaking News
Home / latest-update / பிக்பாஸ் வீடு அருகில் வாலிபர் பலி

பிக்பாஸ் வீடு அருகில் வாலிபர் பலி

சென்னையில் அமைந்துள்ள பிக்பாஸ் வீடு அருகே அமைந்துள்ள இடத்தின் அருகே சூட்டிங் பணிக்காக வந்த மும்பை வாலிபர் பலியாகியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது.

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த கலீன் இப்ராகிம் ஷேக், பூந்தமல்லி அருகே உள்ள நசரேத்பேட்டையில் அமைந்துள்ள பிக்பாஸ் வீட்டில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், அப்போது, தவறி விழுந்ததில் அவருக்கு காக்கா வலிப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அங்கு சிகிச்சை பெற்ற அவர் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அத்தனியார் தொலைக்காட்சி, அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று கூறியதாகவும், அதன் பின்

பிக் பாஸ் வீடு அமைந்துள்ள இடத்தில் இன்னும் சில சூட்டிங் நடந்துவருகிறது. அங்கு நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொலிசார் கூறுகையில்,

பிக் பாஸ் வீட்டில் வாலிபர் தவறி விழுந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது அவர் நேற்றிரவு இறந்துவிட்டார். விசாரணைக்குப்பிறகே என்ன காரணம் என்று தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

About admin

Check Also

யாழில் கடனை வசூலிக்கச் சென்றவர்களால் குழப்பம்

யாழ்ப்பாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் கடனை வசூலிக்க நேற்றிரவு, வாடிக்கையாளரின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு குழப்பமான சூழ்நிலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*