Thursday , December 14 2017
Breaking News
Home / latest-update / அரிப்பு ஏற்படுவது ஆபத்தா? எந்த நோயின் அறிகுறி?

அரிப்பு ஏற்படுவது ஆபத்தா? எந்த நோயின் அறிகுறி?

நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள் அரிப்பை ஏற்படுத்துகிறது. நம் உடம்பிற்குள் ஏதேனும் ஒரு வேண்டாத பொருள் நுழைந்து விட்டால், அதன் எச்சரிக்கையாக இந்த அறிகுறி தென்படும்.

உடலியல் ரீதியாக அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு என்று கூறலாம்.

அரிப்பு ஏற்படுவது ஏன்?

ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதமான இம்யூனோகுளோபுலின் – ஈ (IgE)-ஐ ரத்த செல்கள் உருவாக்குகின்றது. பிடிக்காத பொருள் முதல் முறையாக நம் உடம்பிற்குள் நுழையும் போது, இந்த புரதம் உருவாகி ரத்தத்தில் இருக்கும்.

அதே ஒவ்வாத பொருள் மீண்டும் நம் உடலுக்குள் நுழையும் போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும்.

இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ஹிஸ்டமின், லுயூக்கோட்ரின் (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றி, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும்.

அதன் விளைவாக தான் தோலில் அரிப்பு, தடிப்பு, சிவப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

 

அரிப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன?
•அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், உடலின் வெளியில் ஏற்படும் அரிப்பு மற்றும் உடலுக்குள் தோன்றும் அரிப்பு என்று 2 வகையை மருத்துவம் பிரித்து வைத்துள்ளது.
•செயற்கை அழகுச் சாதனப் பொருட்கள், கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிவது போன்றவற்றால் உடல் அரிக்க தோன்றும்.
•குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளமை, பிட்டத்தில் அரிப்பு மற்றும் ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்ற காரணத்தினால் அரிப்பு ஏற்படலாம்.
•சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகள், துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு போன்றவற்றால் அலர்ஜியாகி, அரிப்பு ஏற்படலாம்.
•வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள், குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
•செல்லப் பிராணிகளான பூனை போன்ற விலங்கினங்களின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு ஏற்பட்டு தடிப்புகள் உண்டாகும்.
•முதுமையில் ஏற்படும் அரிப்பிற்கு தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பு பிரச்சனை ஏற்படும்.

அரிப்பை அறிகுறியாக வெளிப்படுத்தும் நோய்கள்?
•சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை காரணமாக அரிப்பு ஏற்படும்.
•ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு நூல் புழு காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம்.
•உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
•நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு, பித்தப்பை பிரச்சினை, மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்எனும் மூளை நரம்புப் பிரச்சினை போன்றவை நோய்களின் அறிகுறியாக அரிப்பு தென்படும்.

அரிப்பு வராமல் தடுப்பது எப்படி?

சில உணவுகள் ஒத்துக் கொள்ளாததால், அரிப்பினை உண்டாக்கும். அதிலும் முக்கியமாக பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மற்றும் அரிப்பிற்கு காரணமான ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா ஆகிய மருந்துகளை அதிகம் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்.

About admin

Check Also

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார். கடந்த மே மாதம் கரூர், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*