Sunday , October 22 2017
Breaking News
Home / latest-update / துன்னாலையில் நீடித்து வந்த பதற்றமான சூழ்நிலை சற்றுத் தணிவு

துன்னாலையில் நீடித்து வந்த பதற்றமான சூழ்நிலை சற்றுத் தணிவு

தொடர் சுற்றிவளைப்புக்களாலும், கைதுகளாலும் யாழ். துன்னாலையில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பதற்றமான சூழ்நிலை இன்றைய தினம் சற்றுத் தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 09ஆம் திகதி சட்டவிரோத மணல் ஏற்றி வந்த ஹன்டர் வாகனம் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞரொருவர் பலியாகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நிலை கொண்டிருந்த கடற்படையினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொழும்பிலிருந்து விசேட பயிற்சி பெற்ற விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டனர்.

அத்துடன், விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அத்துடன் இதன்போதான தொடர் கைதுகளால் துன்னாலைப் பகுதியில் தொடர் பதற்றமான சூழல் நீடித்து வந்த நிலையில் இது தொடர்பாக அப் பகுதி பொதுமக்கள் சிலரால் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இதனையடுத்து துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்குமிடையிலான அவசர சந்திப்பொன்று நேற்றைய தினம் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பையடுத்து நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறும் வேளையில் இவ்வாறான பதற்றமான சூழலை ஏற்படுத்த வேண்டாம் எனவும் இவ்வாறான சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடுமாறு பொலிஸ்மா அதிபரைக் கடிதம் மூலமாகவும், தொலைபேசியூடாகவும் வலியுறுத்துவதாக உறுதியளித்திருந்தார்.

அந்த அடிப்படையில் பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்ட வட மாகாண முதலமைச்சர் துன்னாலையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரியுள்ளார்.

நேற்றைய தினம் குறித்த பகுதியிலிருந்து விசேட அதிரடிப்படையினர் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சற்று முன்னர் வரை துன்னாலையில் அமைதி நிலவுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

About admin

Check Also

பா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பு – சர்ச்சை கருத்துக்களை நீக்க தயார் என மெர்சல் தரப்பில் அறிவிப்பு

மெர்சல் திரைப்பட விவகாரத்தில் தயாரிப்பாளர் தரப்பினர் பா.ஜ.க தலைவர்களை சந்தித்ததை அடுத்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க தயார் என பட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*