Thursday , December 14 2017
Breaking News
Home / latest-update / அரச ஊழியர்களின் அலுவலக நேரத்தில் இன்று முதல் மாற்றம்!

அரச ஊழியர்களின் அலுவலக நேரத்தில் இன்று முதல் மாற்றம்!

போக்குவரத்து நெரிசல் காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவது தாமதப்படுவதால் அவர்களது வேலை நேரத்தில் சலுகை வழங்கும் முன்னோடித்திட்டம்  (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அலுவலக நேரங்களில் நெகிழ்வுத் தன்மையினைக் கடைப்பிடிக்கும் திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படுமென அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

இத்திட்டம் முதலில் அரச திணைக்களங்கள் அதிகளவில் காணப்படும் பத்தரமுல்ல பிரதேசத்தில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்கள் காலை 7.30 மணி முதல் 9.15 வரை எந்த நேரத்திலும் வருகை தர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்கள் அலுவலகத்திற்குச் சமூகமளித்த நேரத்தில் இருந்து மலை 3.15 தொடக்கம் 5.30 மணி வரையான காலப் பகுதியில் அவர்களது வேலையை நிறைவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஊழியர்கள் காலை 9.15 தொடக்கம் மாலை 3.15 வரையான நேரத்தில் கடமையில் கட்டாயம் ஈடுபடவேண்டும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

About admin

Check Also

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார். கடந்த மே மாதம் கரூர், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*