Wednesday , October 18 2017
Breaking News
Home / latest-update / மின்னல் மற்றும் கடும் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்க முடியும்–வளிமண்டலவியல் திணைக்களம்

மின்னல் மற்றும் கடும் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்க முடியும்–வளிமண்டலவியல் திணைக்களம்

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையில் இலங்கைக்கு வாயு மண்டல தளம்பல் நிலை காரணமாக மின்னல் மற்றும் கடும் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடி மின்னல் காரணமாக இலங்கையில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இக்காலப்பகுதியில் நாட்டை சுற்றியுள்ள மற்றும் வங்காளவிரிகுடாவில் கடற்பிரதேசத்தில் வளிமண்டலவியலில் தளம்பல் நிலை வலுவடையக்கூடும். இதனை தொடர்ந்து காற்றின் வேகம் வேகமாக அதிகரிக்க கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

About admin

Check Also

தீபாவளி ஸ்பெஷல்: தித்திப்பான பாதுஷா

அனைவருக்கும் பாதுஷா பிடிக்கும். இந்த தீபாவளிக்கு தித்திக்கும் பாதுஷாவை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*