Wednesday , October 18 2017
Breaking News
Home / latest-update / லண்டன்: பாதசாரிகள் கூட்டத்தில் கார் பாய்ந்த விபத்தில் பலர் காயம்

லண்டன்: பாதசாரிகள் கூட்டத்தில் கார் பாய்ந்த விபத்தில் பலர் காயம்

லண்டன்:

லண்டனில் உள்ள தெற்கு கென்சிங்டன் பகுதியில் மிகவும் பழைமையான தேசிய வரலாற்று அருங்காட்சியகம் உள்ளது. பரபரப்பு நிறைந்த இந்த பகுதியில் அருங்காட்சியகத்தின் அருகே உள்ள நடைபாதைக்குள் பாய்ந்த ஒரு கார் மோதியதில் பலர் காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அந்த வாடகை காரின் டிரைவரை கைது செய்த ஸ்காட்லாந்து யார்டு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் லண்டன் நகரில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் அருகே பாதசாரிகள் மீது காரை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் ஜூன் மாதம் லண்டன் பாலம் அருகே நடைபெற்ற இதேபோன்ற மற்றொரு தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.

இன்றைய தாக்குதலுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் காயமடைந்த பலர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஏற்றிச் செல்லும் காட்சிகளையும், அங்கு ஹெலிகாப்டர் மூலம் போலீசார் ரோந்து சுற்றிவரும் காட்சிகளையும் லண்டன் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

About admin

Check Also

தீபாவளி ஸ்பெஷல்: தித்திப்பான பாதுஷா

அனைவருக்கும் பாதுஷா பிடிக்கும். இந்த தீபாவளிக்கு தித்திக்கும் பாதுஷாவை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*