Thursday , December 14 2017
Breaking News
Home / யாழ்ப்பாணம் / இரத்தவங்கியின் மடிக்கணனியைத் திருடியவருக்கு 14ம் திகதி வரை விளக்கமறியல்

இரத்தவங்கியின் மடிக்கணனியைத் திருடியவருக்கு 14ம் திகதி வரை விளக்கமறியல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனியை திருடிய நபரை இம்மாதம் 14ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனி இம்மாதம் முதலாம் திகதி அங்கு வந்த நோயாளர் ஒருவரால் திருடப்பட்டுள்ளது. குறித்த நபர் இம்மடிக்கணனியை எடுத்துச் சென்று நோயாளர் காவு வண்டிக்கு அருகில் நின்றிருந்தபோது வைத்தியசாலை ஊழியர்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பொலிசாரின் விசாரணையின் போது யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள  அபான்ஸ் காட்சியறையில் குறித்த சந்தேக நபர் தொலைக்காட்சியொன்றையும் திரு யுள்ளமை தெரியவந்துள்ளது. தொலைக்காட்சியும் மடிக்கணனியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

About admin

Check Also

யாழில் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த முஸ்லீ்ம் காவாலிகள் துரத்திப் பிடிக்கப்பட்டனர்!!

யாழில் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த முஸ்லீ்ம் காவாலிகள் துரத்திப் பிடிக்கப்பட்டனர்!! யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்று வந்த தொடர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*