Wednesday , January 17 2018
Breaking News
Home / இந்தியா

இந்தியா

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் இன்று தெரிவித்துள்ளார்.#jayalalithadeath #Dhivakaran #apollohospital  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் இன்று மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரரான திவாகரன் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2016 அன்று …

Read More »

கமலின் கட்சி பெயர் வெளியிடும் நாள் அறிவிப்பு!

தமிழக அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன் கட்சி குறித்தான அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் தொடக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து வருகிற பெப்ரவரி மாதம் 21-ம் திகதி தொடக்க இருக்கிறேன். ஆரம்பக்கட்டச் …

Read More »

133 அடி மணல் சிற்பத்தில் சிறப்பிக்கப்பட்ட திருவள்ளுவர்!

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளின் மறுநாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவது சிறப்பம்சமாகும். இந்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது முழு உருவ மணல் சிற்பத்தை உருவாக்க அரசு சிற்பக் கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர். இதையொட்டி 25-க்கும் மேற்பட்ட சிற்பக் கல்லூரி மாணவர்கள் கடந்த 4 நாட்களாக இந்த பிரமாண்ட சிற்பத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் தமிழ் சங்கத்தினர் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர். ஒரிசா கடற்கரை …

Read More »

சிறைச்சாலையில் பள்ளிப் படிப்பைத் தொடரும் சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, வி.கே.சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு வயது வந்தோருக்கான கல்வியறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்று சசிகலா கன்னடம் பயின்று வருகிறார். இந்த திட்டம் மூலம் கன்னட எழுத்துக்கள், அடிப்படையான படிக்கும் திறன், உச்சரிப்பு ஆகியவை கற்று தரப்படுகிறது. மேலும் கணினி அறிவியலும் சசிகலா கற்று கொண்டிருக்கிறார். அவருடன் …

Read More »

இஸ்ரோ தனது 100-வது செயற்கைகோளை நாளை விண்ணில் செலுத்த உள்ளது…!!!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது 100-வது செயற்கைகோளை நாளை விண்ணில் செலுத்த உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் திகதி பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் செயற்கைகோளின் மேல் அமைக்கப்பட்டு இருந்த வெப்பத்தகடு சரியாக செயல்படாததால் செயற்கைகோள் தோல்வியை தழுவியது. இதையடுத்து தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ உள்பட 31 …

Read More »

நிறத்திற்காக மாணவி எடுத்த விபரீத முடிவு!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 9 ஆம் தர மாணவி ஒருவர் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் தன்னை கிண்டல் செய்த காரணத்தால் மனமுடைந்து தனக்குத்தானே தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். லாவண்யா(14) என்ற மாணவி, Domadugu கிராமத்தில் உள்ள Pragathi High School இல் கல்வி கற்றுவந்துள்ளார். இவருடன் படிக்கும் சக மாணவர்கள், லாவண்யாவின் தோல் நிறத்தை கிண்டல் செய்துள்ளனர், கருப்பாக இருக்கிறாய், பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது என அடிக்கடி கிண்டல் …

Read More »

அரசியல் பிரவேசத்தில் புதியதாக களமிறங்கும் நடிகர் பட்டாளம்!

திரைப்பட இயக்குநர், நடிகர் பாக்யராஜ் பிறந்த நாள் விழா அவரது ரசிகர்கள் சார்பில் மதுரையில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்தது. விழா முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ரஜினி, கமல் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., தன் படங்களில் சமூகத்திற்கு தேவையான அரசியல் கருத்துக்களை புகுத்தினார். சகதொழிலாளிகளுக்கும், மக்களுக்கும் நல்லது செய்தார். …

Read More »

ரஜினியின் கட்சியின் பெயர், கொடி குறித்து தகவல் அறிவிக்கப்படும் – ராகவா லாரன்ஸ்…!!!

ரஜினிகாந்த் அரசியல் பயணத்தின் முதல் அடியாக மதுரையில் முதலாவது மாநாடு நடத்தப்படுவதாகவும், அதில் கட்சியின் பெயர், கொடி குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார். ரஜினிகாந்தின் கட்சி பெயர், கொடி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததை தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மதுரையில் …

Read More »

இலங்கை அகதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா அரசாங்கம்?

இந்தியாவில் திருச்சி – கொட்டப்பட்டில் உள்ள அகதிகள் முகாமில் மத்திய அரசின் குழுவினர் ஆய்வு செய்த போது, தமக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்து மனு கொடுத்துள்ளனர். மத்திய அரசின் உள்விவகாரத்துறை அமைச்சகத்தை சேர்ந்த எஸ்.கே.பரிடா, சதீஸ்குமார் அடங்கிய குழுவினர் திருச்சி, கொட்டப்பட்டில் உள்ள அகதிகள் முகாமை ஆய்வு செய்தார்கள். இதன்போது, 50க்கும் மேற்பட்ட அகதிகள் இந்த இரட்டைக்குடியுரிமை கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர். எனினும் …

Read More »

ஸ்டாலினிடம் பேசியது குறித்து ஒருதலைப்பட்சமான அறிக்கை: திமுக மீது முதல்வர் புகார்

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நீக்கி, தமிழக மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையைப் போக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, …

Read More »