Wednesday , January 17 2018
Breaking News
Home / மரு‌த்துவ‌ம்

மரு‌த்துவ‌ம்

பற்களில் கூச்சம் வருவதற்கான காரணங்கள்

சிலருக்கு சூடான, குளிர்ந்த அல்லது மிகவும் இனிப்பான, புளிப்பான உணவுகளை சாப்பிடும் போது பற்களில் கூச்சம் ஏற்படும். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்சனை. சூடான மற்றும் குளிர்ந்த உணவுகள் அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஒரு வலி என்று இது குறிப்பிடப்படுகிறது. தீவிர நிலையில் குளிர்ந்த நீர் அருந்தினால் கூட இந்த வலி உண்டாகும். பல் …

Read More »

பேரீச்சம் பழத்தை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் அதிகம்

பேரீச்சை அள்ளி வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கு குறைவில்லை. பேரீச்சம் பழத்தை எந்த முறையில் சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். பேரீச்சம்பழத்தை அதன் தித்திப்புக்காக குழந்தைகளும் விரும்புவர். ஆனால் பேரீச்சை அள்ளி வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கும் குறைவில்லை. கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துணவுப் பழமாக பேரீச்சை உண்ணப்பட்டு வருகிறது. ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. இதில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து ஆகியவையும் …

Read More »

குளிர்காலத்தில் இனி இருமல் இல்லை

குளிர்காலத்தில் தொண்டையையும், மார்பகத்தையும் சளியும், இருமலும் ஆக்கிரமிக்கும். அதிகாலை பொழுதில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பால் சுவாச கோளாறு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பனித்தாக்கத்தில் இருந்து சுவாச உறுப்புகளை தற்காத்து கொள்ள வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே தீர்வு காணலாம். அவை குறித்து பார்ப்போம். சளி தொந்தரவுக்கு தொண்டை வலிதான் தொடக்க அறிகுறியாக இருக்கும். அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. அது தொண்டையில் ஏற்படும் …

Read More »

இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் ஏற்படும் பாதிப்புகள்

இரத்தம் மாபெரும் வேலையை நம் உடலினுள் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இந்த ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று பார்க்கலாம். நமது உடலில் சுற்றோட்ட அமைப்பு சிறிது நேரம் கூட ஓய்வு எடுப்பதில்லை. ஒவ்வொரு நொடியும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஏதோ ஒரு அடிபடும் பொழுதோ ரத்தம் வெளியேறும் பொழுதோ, ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை வரும் பொழுதோ மட்டுமே அதற்கு அக்கறை காட்டப்படுகின்றது. 5-6 லி …

Read More »

கல்லீரலை நாம் சுத்தம் செய்வது எப்படி?

உடலில் நம் உறுப்புகளை நாம் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில் நம் கல்லீரலை நாம் எப்படி சுத்தம் செய்து கொள்வது என்பதனை அறிவோம். ஒரு நல்ல கார் உங்களிடம் இருந்தால் அதனை எப்படி எல்லாம் பாதுகாப்பீர்கள். சர்வீஸ் செய்வீர்கள். எண்ணெய் மாற்றுவீர்கள். என்னென்ன தேவையோ அதையெல்லாம் செய்வீர்கள். அது போலத்தான் நம் உடம்பின் உறுப்புகளை நாம் காக்க வேண்டும். சரியான சத்து, பராமரிப்பு, கழிவுப் பொருள் நீங்குதல். …

Read More »

தொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள்

இனிய சுவையுடன் ஏராளமான நன்மைகளையும் அளிப்பவை பழங்கள். எண்ணற்ற சத்துகளைக் கொண்ட பெட்டகங்களாக அவை திகழ்கின்றன. குறிப்பாக, வாழை, பப்பாளி, கொய்யா, அன்னாசி, மாதுளை போன்ற எளிதாகக் கிடைக்கும் பழங்களைக் கூறலாம். இந்தப் பழங்கள் பலவித நோய்களில் இருந்து நமக்கு விடுதலை தரக்கூடியவை, மலச்சிக்கல் தொடங்கி இதயநோய் வரை அனைத்தையும் குணப்படுத்தக்கூடியவை. வாழைப்பழம்: இயற்கையாகவே வாழைப்பழத்தில் அமில எதிர்ப்புச் சக்தி அதிகம். அதனால், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் …

Read More »

மருத்துவ செய்தி ஆரோக்கியம் தரும் சோளம்

சில நேரங்களில் வேண்டாம் என ஒதுக்கும் சோளத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது. சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம்(Genus) ஆகும். இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சோளத்தில் பார்வைக் குறைபாட்டை தடுக்கும் பீட்டா கரோட்டீன், புற்றுநோயை தடுக்கும் பெருலிக் அமிலமும் அடங்கியுள்ளது. சோள மாவில் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், நமது நரம்பு …

Read More »

பித்தப்பை கல் ! அறிகுறிகளை அறிவோம்!

கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீர், பித்தப்பையில் சேகரிக்கப்பட்டு, சிறிய குழாய் போன்ற உறுப்பு வழியாக, உணவு செரிமான மண்டலத்தை அடைகிறது. பலருக்கு பித்தப்பையில் கல் உருவாகியிருக்கும். ஆனால், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வேறு காரணத்துக்காக பரிசோதனை செய்யும்போதுதான் பித்தப்பையில் கல் இருப்பது தெரியவரும். பித்தப்பை கல், பித்தப்பை குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான் அதன் பாதிப்புகள் வெளிப்படும். அறிகுறிகள் வலது பக்கம் மேல் வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி, …

Read More »

பல நோய்கள் ஏற்பட காரணமாய் இருக்கும் மலச்சிக்கல்

வழக்கத்திற்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் இறுகிப்போவது, மலம் கழிப்பதில் சிக்கல், மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூட போகாமல் ஆசனவாயை அடைத்துக் கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்’ என்று அழைக்கிறோம். வருடத்துக்கு இரண்டு முறை பேதிக்குச் சாப்பிட்டு வாய் முதல் ஆசனவாய்வரை உள்ள உணவுப் பாதையை முழுமையாகச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான நேரத்துக்குச் சத்தான அறுசுவை உணவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றை அரைப் …

Read More »

உளுந்து – மருத்துவப் பயன்கள்

நோயின் பாதிப்பு நீங்க: கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது. உடல் சூடு தணிய: …

Read More »