Home / இலங்கை

இலங்கை

செல்லப்பிராணி விவகாரம் – 5 சுங்க அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி

தங்களுடைய செல்லப்பிராணியை தனிமைப்படுத்திய காரணத்தால் சுங்க அதிகாரிகளை குவைத் நாட்டு தம்பதிகள் தாக்கியதில் 5 சுங்க அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More »

நீரில் மிதந்த சடலத்தால் பதற்றமடைந்த தமிழ் மக்கள்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவில் இன்று மதியம் 2.00 மணியளவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் வெஞ்சர் லோவர் லோறன்ஸ் பகுதியில், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் கெசல்கமுவ ஓயாவிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக பொது மக்கள் வழங்கிய தகவலினையடுத்தே இச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்ட இந்தச் சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக …

Read More »

GIT பரீட்சைக்கு தோற்றியவர்களில் 94% மேற்பட்டோர் சித்தி

2017 ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரத்தில், தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளுள் 94 சதவீதத்திற்கு மேற்பட்டோர் சித்தி அடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2017 ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இந்த பரீட்சையின் பெறுபேறுகளே இவ்வாறு நேற்று (17) வௌியிடப்பட்டன. 158,805 பரீட்சார்த்திகள் இந்த பரீட்சைக்கு தோற்றிய நிலையில், இவர்களுள் 150,005 பேர் சித்தியடைந்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பரீட்சை முடிவுகளை www.doenets.lk …

Read More »

எரிபொருள் விலை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு எதிராக ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமையை அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று (18) மதியம் 3 மணி அளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும், தேவை அற்ற வரிகள் நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதன் போது முன்வைக்கப்பட்டுள்ளன. …

Read More »

மூன்று கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலருடன் வெளிநாட்டவர்கள் கைது

இலங்கையில் இருந்து 2,75,24,000 ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் தொகையை சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த சீன மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த நால்வர் இன்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சீன நாட்டவர்கள் இருவரும் 30 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், நேபாள நாட்டவர்கள் 20 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. …

Read More »

விஷேட மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பம்

பாரிய அளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்டுள்ள விஷேட மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஷேட நீதிமன்றத்தில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவை, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நியமித்துள்ளார். அதனடிப்படையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் ஜானகி ராஜபக்ஷ ஆகியோரே இவ்வாறு நீதிபதிகள் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று …

Read More »

பிரதேச அபிவிருத்தி அதிகாரியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

அகுருவாதொட்ட, யால சந்தி, வெரவத்த பகுதியில் பிரதேச அபிவிருத்தி அதிகாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (16) அதிகாலை 3.50 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தொடம்கொட பிரதேச செயலகத்தில் கடமை புரியும் 35 வயதுடைய அபிவிருத்தி அதிகாரி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்த நபர்கள் தொடர்பில் இதுவரையில் அடையாளம் …

Read More »

6 ஆவது உலக வனாந்தர வார மாநாட்டில் ஜனாதிபதி இன்று விஷேட உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (16) இத்தாலியின் ரோம் நகரில் 6 ஆவது உலக வனாந்தர வார மாநாட்டில் உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், உலக வனப்பாதுகாப்புக் குழுவின் 24 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சனிக்கிழமை இத்தாலியின் ரோம் நகருக்கு பயணமாகினார். நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு வனாந்தரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய பங்களிப்பைக் கண்டறிவதாகும் என்பதே …

Read More »

கடலில் விழுந்த மீனவரை காணவில்லை

மோதர துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார். கடந்த 14 ஆம் திகதி மோதர துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற நான்கு மீனவர்கள் நேற்று (15) மீண்டும் வருகை தரும் போது படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். லியகொடவத்த, பரகஸ்தொட்ட பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். …

Read More »

வானிலை முன்னறிவிப்பு – காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன் சில இடங்களில் 50 …

Read More »