20 ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக போராட்டம்-ரஞ்சித் மத்தும பண்டார

20 ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக போராட்டம்-ரஞ்சித் மத்தும பண்டார

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி இன்று முதல் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக அதன் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக இன்றைய தினம் நாடுமுழுவதும் கையேடுகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 20ஆம் திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை, ஐவர்கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று 4ஆவது நாளாகவும் இடம்பெறவுள்ளது