கொரோனா தொற்று தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை – பிரதமர் மஹிந்த

கொரோனா தொற்று தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை – பிரதமர் மஹிந்த

இலங்கை மக்கள் கொரோனா தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எச்சரிக்கையாகவும், பொறுப்புடனும் மக்கள் செயற்படுவது அவசியம் எனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, இலங்கை அரசாங்கம், சுகாதார அதிகாரிகள், பொலிஸ் மற்றும் முப்படையினர் ஆகியோர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.