வைரஸின் செறிவு குறித்து ஆய்வாளர்கள் சோதனை! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்

வைரஸின் செறிவு குறித்து ஆய்வாளர்கள் சோதனை! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் கொரோனா வைரஸின் செறிவு அதிகமானதா? எனபது குறித்து வைரஸ் ஆய்வாளர்கள் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நாடாளுமன்றத்தில் இன்று இதனை தெரிவித்துள்ளார்.

சில மருத்துவர்கள் கூறியது போல, புதிய கொத்தணியின்போது வைரஸின் செறிவு அதிகமாக உள்ளதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“வைரசின் செறிவு அதிகம். அதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. வைரஸ் சுமை அதிகமாக இருந்தாலும், நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடிய சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

பி.சி.ஆர் சோதனைகள் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் குறைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பி.சி.ஆர் சோதனைகளை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்தார்.