
80 இலட்சத்தைக் கடந்துள்ள அமெரிக்காவின் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 80 இலட்சத்தைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 45 ஆயிரத்து 195 பேருக்கு அமெரிக்காவில் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய, 80 இலட்சத்து 37 ஆயிரத்து 193 பேருக்கு அமெரிக்காவில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் 315 மரணங்கள் அங்கு பதிவாகியுள்ளன.
இதன்படி, கொவிட்-19 காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 20 ஆயிரத்து 10ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் 2 இலட்சத்து 71 ஆயிரத்து 991 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 80 இலட்சத்து 28 ஆயிரத்து 426 ஆக உயர்வடைந்துள்ளது.
3 ஆயிரத்து 695 பேர், கடந்த 24 மணிநேரத்தில் சர்வதேச ரீதியில் மரணித்துள்ளனர்.
இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 85 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 2 கோடியே 85 இலட்சத்து 80 ஆயிரத்து 391 பேர், சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.