
பணத்தகராறு காரணமாக பிணமாகிப் போன சகோதரர்- மஹியங்கனையில் சம்பவம்
குடும்பத்தில் பணத்தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தை, தொடர்ந்து மூத்த சகோதரர் ஒருவர் தனது தம்பியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளார்.
நேற்றிரவு (30) 8.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக மஹியங்கனை காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் 33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் ஆவார்.
இந்நிலையில் சம்பவத்தின் போது காயமடைந்த உயிரழந்த நபரின் மனைவி மஹியங்கனை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனைகள் மற்றும் நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.