பாதீட்டு விவாதத்திற்கான நாட்களை குறைப்பது குறித்து அவதானம்

பாதீட்டு விவாதத்திற்கான நாட்களை குறைப்பது குறித்து அவதானம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதீட்டு விவாதத்திற்கான நாட்களை குறைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வட்டார தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.

எதிர்வரும், 3 ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் கூடவுள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது, இது தொடர்பில் இறுதி தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் எதிர்வரும் 17 ஆம் திகதி அடுத்த வருடத்திற்கான பாதீட்டை நாடாளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் முதல் 26 நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு, அது நிறைவேற்றப்படுவது வழமையான சம்பிரதாயம் ஆகும்.

எவ்வாறாயினும், கொவிட் 19 பரவலுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தை கூட்டுவது, சவாலான விடயம் எனவும் இதன் காரணமாக விவாதத்திற்கான நாட்களை குறைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.