
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருள் விநியோகம் செய்ய விசேட பொறிமுறை
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய விசேட பொறிமுறைமை உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திரா சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணம் முழுவதிலும், இரத்தினபுரி, களுத்துறை மற்றும் குளியாப்பட்டி ஆகிய பிரதேசங்களின் சில இடங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 9ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரையில் இந்தப் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போது அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்தது போன்று விசேட பொறிமுறைமையின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.