அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி நாள் வாக்கு பதிவுகள் இன்று...!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி நாள் வாக்கு பதிவுகள் இன்று...!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி நாள் வாக்கு பதிவுகள் இன்று இடம்பெறுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப மற்றும் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜோ பைடன் ஆகியோருக்கு மக்களின் ஆதரவு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 97 மில்லியன் மக்கள் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

இது 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் மூன்றில் இரண்டு வாக்குப் பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மற்றும் ஹவாய் மாநிலங்களில் ஏற்கனவே அதிகளவான வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளன

அதேநேரம் வடக்கு கரோலினா, ஜோர்ஜியா மற்றும் புளோரிடா பகுதிகளிலும் அதிகளவான வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கியுள்ள ஜோ பைடனுக்கு ஆதரவாக வாக்குகள் அதிகரிக்கலாம் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

அத்துடன் 2016 ஆம் ஆண்டு பதிவான வாக்குகளை விடவும் இந்த முறை அதிகமான வாக்குகள் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.