அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள அசேல குணவர்தன மேற்கொண்டுள்ள தீர்மானம்...!

அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள அசேல குணவர்தன மேற்கொண்டுள்ள தீர்மானம்...!

அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டில் சில பகுதிகளில் கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகள், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நாளாந்த பொதுமக்கள் வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான அவசியமான ஊழியர்கள் மற்றும் அத்தியாவசியமான சேவைகளுக்கான ஊழியர்களுக்கு பொருந்தாது.

இதனை தவிர்த்து ஏனைய ஊழியர்களை பணிக்கு அவசியமான சந்தர்ப்பத்தில் அழைப்பதாக இருப்பின், அது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்து அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துக்கொள்ள 011 7 96 63 66 என்ற தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.