
இன்றைய ராசி பலன்கள் 15/11/2020
மேஷம்
செல்வ நிலை உயரும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்
கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும் நாள். சுபவிரயங்கள் கூடும். வேலைகள் உடனுக்குடன் முடியாமல் நண்பர்கள் இழுத்தடிக்கலாம். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும்.
மிதுனம்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். விருந்தினர்களை உபசரிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் நலம் சீராகும். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள்.
கடகம்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக உங்கள் வீட்டிற்கு வராத உறவினர் ஒருவர் இன்று திடீரென வரலாம்.
சிம்மம்
வரவும் செலவும் சமமாகும் நாள். எப்படி நடக்குமோ என நினைத்த காரியமொன்று நல்லபடியாக நடக்கலாம். உத்தியோகத்திற்காக செய்த ஏற்பாடு அனுகூலம் தரும். ஆரோக்கிய பாதிப்பு அகலும்.
கன்னி
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். சுபச் செய்தி உண்டு.
துலாம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். மாமன், மைத்துனர்களின் வழியில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும். தொழில் ரீதியாக உதிரி வருமானங்கள் வந்து சேரலாம்.
விருச்சகம்
இறைவழிபாட்டால் இனிய பலன் கிடைக்கும் நாள். தொட்டது துலங்கும். வருமானம் இரு மடங்காகும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பால் நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள்.
தனுசு
சுபகாரியப் பேச்சுகள் முடிவடையும் நாள். நேற்றைய பிரச்சினை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். மறதியால் விட்டுப்போன காரியமொன்றை மீண்டும் செய்து முடிப்பீர்கள்.
மகரம்
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்களை திடீரென மாற்றியமைப்பீர்கள்.
கும்பம்
உத்தியோக மாற்றச் சிந்தனை உறுதியாகும் நாள். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. நீண்டதூரப் பயணங்கள் செல்வதில் நாட்டம் ஏற்படும். வாழ்க்கைத் துணை வழியே விரயம் உண்டு.
மீனம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீட்டுப் பராமரிப்புச் செலவு கூடும். பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் பெருமைகள் ஏற்படும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.