ஆயுதங்கள் அரும்பொருட் காட்சியகம் அமைத்தல்

ஆயுதங்கள் அரும்பொருட் காட்சியகம் அமைத்தல்

2020.11.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளில், ஆயுதங்கள் அரும்பொருட் காட்சியகம் அமைத்தல் தொடர்பிலும் எட்டப்பட்டுள்ள தீர்மானம்.

தொல்பொருள் அகழ்வுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற கல் ஆயுதங்கள் உள்ளிட்ட புராதன ஆயுதங்கள், சம்பிரதாயமாகப் பயன்படுத்தப்பட்டதும் தற்போது பாவனையற்றுப் போகும் ஆயுதங்கள் மற்றும் நவீன ஆயுதங்களை திரட்டிப் பேணுதல், பராமரித்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான முறையான வேலைத்திட்டம் அவசியமென அடையாளங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையை கவனத்தில் கொண்டு தற்போது தேசிய தொல்லியல் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் மிகவும் பொருத்தமான அரும்பொருட் காட்சியகத்தில் பாதுகாப்பதற்கான வேறானதொரு அலகை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.