
தேசிய மர நடுகை திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை நடும் ”ஹுஸ்ம தென துரு“ தேசிய மர நடுகை திட்டம் ஜனாதிபதி கோத் தாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கை பிரகடனத்தின் படி, நாட்டின் வனப்பகுதியை நூற்றுக்கு 30% ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சுற்றாடல் அமைச் சினால் இந்த நிகழ்ச்சித் திட்டமிடப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் கார்பனீரொட்சைட்டின் அளவைக் குறைத்து, ஒட்சிசனின் அளவை அதிகரிக்கும் நோக் கத்துடன், அந்த அந்த பிரதேசங்களுக்குப் பொருத் தமான மரங்கள் நட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அத்தோடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 02 மில்லியன் மரக் கன்றுகளை நடுவதற்குச் சுற்றாடல் அமைச்சு திட்ட மிட்டு ள்ளது.
இந்த திட்டத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபையும் சுற் றாடல் அமைச்சும், பாதுகாப்பு தலைமையகம் மற்றும் இலங்கை இராணுவமும் இணைந்து செயல்படும்.
ஜனாதிபதி நேற்று பத்தரமுல்லையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு முன்னால் உள்ள பாதுகாப்பு தலை மையகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் முதலாவது மரக்கன்றாக வெள்ளை சந்தன மரக்கன்றொன்றை நாட் டினார்.
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இரா ணுவ பணிக்குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் மரக்கன்றுகளை நட்டி இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்தனர்.
நாடு முழுவதும் மரக்கன்றுகளை விநியோகிப்பதை ஆரம்பித்து வைக்கும் வகையில் பாடசாலை மாணவர் களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.