
பிரித்தானியா போர்பரி பூங்கா தாக்குதல் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது
பிரித்தானிய போர்பேரி காடனில் மேற்கொள்ளப்பட்ட கூரிய ஆயுத தாக்குதல் தொடர்பில் 25 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் லிபிய நாட்டை சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் மூன்று பேர் பலியானதுடன் மேலும் மூன்று பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
எனினும் தாக்குதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் உளவுத்துறை உள்ளிட்டவர்கள் மூலம் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாமையால் தாங்கள் விழிப்புடன் செயற்படவில்லையெனவும், இருப்பினும் தங்கள் விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான எதையும் பொலிஸாருக்கு அறியத் தரும்படியும் பிரித்தானிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று பிரித்தானிய மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.