
மீனவர்களுக்கான வருமான வரி நீக்கப்படவுள்ளதாக பிரதமர் அறிவிப்பு..!
மீனவர்களுக்கான வருமான வரியினை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
2021 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.