
அதிக வேகத்துடன் உந்துருளிகளைச் செலுத்திய மேலும் 20 பேர் கைது!
அதிக வேகத்துடனும் பல்வேறு விதமாக ஒலிகளை எழுப்பிய வண்ணமும் உந்துருளிகளைச் செலுத்திய 20 பேர் நேற்று இரவு முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை ஊடகப் பேச்சாளரும் பிரதிக் காவல் துறை மா அதிபருமான அஜித் ரோஹன தொிவித்துள்ளார்
இதேவேளை இயந்திர திறன் 450ஐ விட அதிகமாக உள்ள உந்துருளிகள் எந்த வகையிலும் செலுத்தவோ, பதிவு செய்யவோ முடியாது எனவும் அவ்வாறான உந்துருளிகள் விசேட சந்தர்ப்பங்களில் மட்டும் பயன்படுத்த அனுமதியளிக்கப்படுமெனவும் அவர் தொிவித்தார்
அண்மையில் மொரட்டுவை-எகொடஉயன பிரதேசத்தில் சிறுமியர் இருவரை பலியாக்கி கர்ப்பிணித் தாயொருவரையும் படுகாயங்களுக்குள்ளாகிய சம்பவம் காரணமாக, இவ்வாறு அதிக வேகத்தில் மற்றும் அபாயகரமான முறையில் உந்துருளிகளை செலுத்துவோரை கைது செய்யும் பொருட்டே காவல் துறை இத்தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தது
இதனடிப்படையில் மிாிஹானை பொலிஸ் வலயத்திற்குட்பட்ட கிம்புளாவெலை பிரதேசத்தில் நேற்று முன் முன்தினம் இரவு உந்துருளி பந்தயம் ஒன்றை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 24 உந்துருளிகளுடன் வாலிபர்கள் சிலரும் கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.