கொழும்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்..!

கொழும்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்..!

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 538 கொவிட்-19 நோயாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

304 பேர் கொழும்பில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 254 பேர் பொரளையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்ததாக கம்பஹா மாவட்டததில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

28 பேர் கண்டியில் பதிவாகியுள்ளனர்.

25 பேர் கண்டியிலும், 27 பேர் களுத்துறையிலும், 23 பேர் இரத்தினபுரியிலும், 14 பேர் காலியிலிலும், 11 பேர் அம்பாறையிலும், 10 பேர் குருநாகலையிலும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மாத்தறையில் 6 பேரும், மாத்தளையில் 3 பேரும், யாழ்ப்பாணத்தில் 2 பேரும், நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் கொவிட்-19 நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.