ஒத்துழைப்பு திட்டத்திலிருந்து இலங்கை நீக்கப்பட்டாலும் நட்புறவு பேணப்படும்...!

ஒத்துழைப்பு திட்டத்திலிருந்து இலங்கை நீக்கப்பட்டாலும் நட்புறவு பேணப்படும்...!

அமெரிக்காவின் எம்.சீ.சி.என்ற மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு திட்டத்தில் இருந்து இலங்கை நீக்கப்பட்டாலும், இலங்கையுடன் தொடர்ந்து நட்புறவு பேணப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கொழும்பில் உள்ள தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 89 பில்லியன் ரூபாய் வழங்கப்படவிருந்த போதும், அதற்கான உடன்படிக்கை அமைக்கும் விடயத்தில் இலங்கையிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கப்பெறவில்லை என்பதால், அமெரிக்கா இந்த திட்டத்தில் இருந்து இலங்கையை நீக்கியுள்ளது.

குறித்த நிதி வேறொரு நாட்டுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கொவிட் தடுப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் அமெரிக்கா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.