நியூயோர்க்கில் வார இறுதிக்கு முன்னதாக கடற்கரைகளில் நீந்த அனுமதி

நியூயோர்க்கில் வார இறுதிக்கு முன்னதாக கடற்கரைகளில் நீந்த அனுமதி

நியூயோர்க்கில் சுதந்திர தினத்திற்கு முன்னதாக அனைத்து கடற்கரைகளும் நீச்சலுக்காக பொதுமக்களுக்கு திறக்கப்படும் என மேயர் பில் டி பிளேசியோ அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் சுதந்திர தின நினைவு நாள் வார கொண்டாட்டங்களுக்காக ஓரளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், அடுத்த வாரம் நகரத்தின் கடற்கரைகள் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இவ்வாறான தளரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சமூக விலகல் விதிகளைப் பின்பற்ற வேண்டும் மற்றும் கடற்கரையில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

நியூயோர்க்கில் நேற்றைய நிலவரப்படி இதுவரை மொத்தம் 412,636 கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 31,314 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 121,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதோடு 2.36 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.