கல்கிஸ்ஸ பகுதியில் இயங்கி வந்த விபசார விடுதி முற்றுகை..!

கல்கிஸ்ஸ பகுதியில் இயங்கி வந்த விபசார விடுதி முற்றுகை..!

கல்கிஸ்ஸ பகுதியில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ குற்றவியல் விசாரணை பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த விபசார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

அதிசொகுசு வீடொன்றில் இந்த விபசார விடுதி இயங்கி வந்துள்ளதோடு, 9 பெண்களும் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் அம்பலாந்தோட்டை, கட்டான, பண்டாரகம, தொம்பே, ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 33 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண்கள், கொழும்பில் வசித்து தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுவதாக உறவினர்களுக்கு தெரிவித்து இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.