புதிய கொத்தணி உருவாகும் அபாயம்! அசேல குணரட்ண எச்சரிக்கை

புதிய கொத்தணி உருவாகும் அபாயம்! அசேல குணரட்ண எச்சரிக்கை

விதிமுறைகளை மீறியமைக்காக, கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக பண்டாரவுக்கு எதிராக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரட்ண தெரிவித்துள்ளார்.

மருந்தினை பெறுவதற்காக பெருமளவு மக்கள் வைத்தியரின் வீட்டின் முன்னாள் காணப்பட்டமை இது இரண்டாவது தடவை எனவும் இதுவொரு புதிய கொத்தணியாக உருவாகும் ஆபத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளஅவர்,

கேகாலை வைத்தியரும் பொதுமக்களும் சுகாதார அறிவுறுத்தல்களை பேணவில்லை என்பது வெளிப்படையாக தெரிகின்றது.

அந்தப் பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ஆனால் அவர்களால் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

குறிப்பிட்ட மருந்து ஆயுர்வேதப் பொருள் என அங்கிகரிக்கப்பட்டுள்ளதால் அதனை விநியோகிப்பதை தடுக்கமுடியாது.

எனினும் நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளை ஊக்குவிக்ககூடாது என்றார்.

இதேவேளை மருந்து விநியோகத்திற்காக பெருமளவு மக்களை ஒரே இடத்தில் - பெருமளவில் காணப்படும் நிலையை ஊக்குவித்தால் அவர் கைதுசெய்யப்படுவார் என கேகாலை சுகாதார மருத்துவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.