விபத்துக்களில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது

விபத்துக்களில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது

விபத்துக்களில் சிக்கி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு நூற்றுக்கு 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

கடந்த வருடங்களில் விபத்துக்களில் சிக்கிய நிலையில் ஒரு இலட்சம் பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என அந்த மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 66 ஆயிரம் பேர் வரையிலேயே சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஊரடங்கு, நடமாட்ட கட்டுப்பாடு என்பன விதிக்கப்பட்டமை காரணமாகவே விபத்துக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறைவடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

வருடாந்தம் 20 வீதமானோர் வாகன விபத்துகளிலும், எஞ்சிய 80 வீதமானோர் வேறு விபத்துக்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த வருடத்தில் வாகன விபத்துக்களின் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலானோரே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.