வவுனியாவில் காணாமற் போன தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியாவில் காணாமற் போன தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் கிணற்றில் இருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை ஓமந்தை பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்றையதினம் அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியளவில் காணாமல்போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடியுள்ளனர். இந்நிலையில் இன்றையதினம் காலை வீட்டிற்கு அருகில் இருந்த வயல் கிணறுஒன்றில் இருந்து அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரமேஸ் ஜெயலலிதா வயது42, மற்றும் அவரது மூன்று வயது மகளான றிதுர்சனா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டனர்.

சடலங்கள் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

IMG 6088

IMG 697148854d5744399a4de8ef3dc8df70 V