இன்றைய ராசி பலன்கள் 29/12/2020

இன்றைய ராசி பலன்கள் 29/12/2020

மேஷம்

உற்சாகத்துடன் செயல்படும் நாள். உடன் பிறப்புகளின் உதவி உண்டு. பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். தடைப்பட்ட கல்யாண பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரலாம்.

ரிஷபம்

அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும் நாள். உடன் பிறப்புகளின் உதவி உண்டு. வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

மிதுனம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உத்தியோக மாற்றம் உறுதியாகும். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களைத்தேடி வரலாம். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

கடகம்

துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். தொழில் மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பக்கத்திலுள்ளவர்களின் பகை மாறும். எதிர்காலம் இனிமையாக அமைய எடுத்த முயற்சிகள் கைகூடும்.

சிம்மம்

வருமானம் திருப்தி தரும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி
செய்து மகிழ்வீர்கள்.

கன்னி

நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

துலாம்

முன்னேற்றம் காண முக்கியப் பிரமுகர்களை சந்திக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும. எதிர்ப்பாக இருந்த தொழில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்து கொள்வர்.

விருச்சகம்

ஆதாயமில்லாத அலைச்சல் ஏற்படும் நாள். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க அதிகம் செலவிடுவீர்கள். மனக்
குழப்பம் உண்டு.

தனுசு

கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். தெய்வ நம்பிக்கை கூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.

மகரம்

மனக்குழப்பம் மாறும் நாள். பொருளாதார விருத்தியுண்டு. மறைமுக போட்டிகளைச் சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். பழைய கடன்களை அடைக்க புதிய வழி பிறக்கும்.

கும்பம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாட்டுப் பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்புச் செய்வர். வசதி, வாய்ப்புகளைப் பெருக்கிக்
கொள்ள முன்வருவீர்கள்.

மீனம்

நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்துதவும் நாள். நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்