முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளான மாணவி வைத்தியசாலையில் அனுமதி! (காணொளி)

முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளான மாணவி வைத்தியசாலையில் அனுமதி! (காணொளி)

அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியில் மோதுண்டு 16 வயது சிறுமியொருவர் விபத்துக்குள்ளாகும் காட்சி சி.சி.டி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.

ஹற்றன்-நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னால் உள்ள பாதசாாிகள் கடவையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹற்றன் ஸ்டொனிக்ளிப் தோட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி கற்கும் 16 வயது மாணவியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயங்களுக்குள்ளான சிறுமி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விபத்தை மேற்கொண்ட சாரதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மேற்படி விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புல காவல் துறையினர் மேற்கொண்டு வருவதோடு குறித்த சாரதி இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.